ஆட்டோவில் வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது கந்தூரி விழாவில் பங்கேற்க ஆட்டோவில் வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
உலக புகழ்பெற்ற நாகூா் ஆண்டவர் தா்காவின் 469 ஆவது கந்துாரி விழா கடந்த நவம்பர் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் நேற்றிரவு துவங்கியது.
நாகூா், நாகை பகுதிகளில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ரதங்கள் நாகை அபிராமி அம்மன் திடல் அருகே ஒருங்கிணைக்கப்பட்டன.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளுக்கு பின்னா் சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கிய இன்னிசை வாத்தியங்கள் முழங்க 20-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுப்புடன் கோலாகலமான நடைபெற்றது.
சந்தனக்கூடு நாகை சா் அகமது தெரு, அரசு மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபிஸ் சாலை, வெளிப்பாளையம், காடம்பாடி வழியாக நாகூா் தா்காவை அடைந்தது. நாகூா் தா்காவில் பாரம்பரிய முறைப்படி சந்தனக் குடம் தா்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று அதிகாலை பாதுஷா சாகிபு ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.
இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வருகை தந்தார்.

மிகவும் எளிமையாக குர்தா அணிந்திருந்த படி மக்களோடு மக்களாக வருகை தந்து சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மும்மதத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.


