கோர்ட் தீர்ப்பு சாதகமாக இருந்தாலும்… கர்நாடகாவில் ThugLife வெளியிட முடியாது
மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் வெளியிட அனுமதித்த ஒரு நாள் கழித்து விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலாகரின் கருத்துக்கள் மணிரத்னத்தின் தலையில் இடியை இறக்கியது.
கன்னட மொழி குறித்த ஹாசனின் சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து மாநிலத்தில் நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது.
சாதகமான நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், படத்தை இப்போது மாநிலத்தில் வெளியிடப் போவதில்லை என்று கூறினார், ஏனெனில் படம் பிளாப் ரிலீஸ் செய்வது வேஸ்ட்.
படத்தை இப்போது வெளியிடுவது நல்ல வணிக முடிவு அல்ல என்பதே எனது கருத்து. அவரது முந்தைய படமான ‘இந்தியன் 2’ கர்நாடகாவில் எடுபடவில்லை,” என்று கமலாகர் கூறினார்.
விநியோகஸ்தர் ஏற்கனவே சுமார் ரூ.9 கோடி முன்பணம் செலுத்தியிருந்தார். மணிரத்தினம் பணத்தை திருப்பி தர ஒத்துகொண்டார், ஆனால் பணம் இன்னும் கைக்கு வரவில்லை “இது எங்கள் தவறு’ இல்லை, லாபம் இல்லாதபோது, எந்த தியேட்டர் உரிமையாளர்கலாவது படத்தை திரையிட ஒப்புக்கொள்வார்களா?” என்று அவர் கேட்டார்.
இதற்கிடையில், பெங்களூருவில் உள்ள பல கன்னட ஆதரவு அமைப்புகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி படத்தை திரையிட வேண்டாம் என்று திரையரங்குகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.