ஐரோப்பிய செய்திகள்

 

ரிஷி சுனக் சொந்த தொகுதியிலேயே தோல்வியுறுநிலை ஏற்பட்டிருகிறது

இன்று 2024…ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் பிரிட்டனின் ஆட்சி நிலை மாறுபடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றது 2015 ஆம் ஆண்டு முதல் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் எம் பி ஆக இருக்கும் ரிஷி சுனக் ..கால் தன் சொந்த தொகுதியில் கூட இந்த முறை ஜெயிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன. நடை பெற்றுகொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் குடியரசு கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சிக்கும் கடம் போட்டி நிலவும் நிலையில் ரிஷி சுனக் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற கேள்வி தற்போது வரை நீடிக்கின்றது 2015 ஆம் ஆண்டு ரிச்மென்ட் தொகுதி மற்றும் நார்தாலர்டன் பகுதியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றார்.

2019 இல் அதே தொகுதியில் நின்று மீண்டும், வெற்றியை பெற்றார் ஆனால் சமிபத்தில் ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பின்படி ரிஷி அவரது சொந்த தொகுதியில் தோல்வியுறுநிலை உருவாக்கி இருப்பதாக அறிவிக்கிறது. இந்த தேர்தலில் ரிஷி தோல்வியுற்றால் அது பிரிட்டன் ஆட்சிக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் ஏனென்றால் பிரதமர் சீட்டில் இருக்கும் ஒருவர் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை .அவர் தொகுதியின் வாக்கு நிலவரங்களின் படி ரிஷி…இக்கு பின்னடைவு ஏற்படுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 380 இடங்களை பிடித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது பிரிட்டன் வரலாற்றிலேயே கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைக்க போகும் மிகப்பெரும் தோல்வியாக இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Uk 2024 தேர்தலில் கலம் இறங்கி இருக்கும் தமிழர்கள்

பிரிட்டனில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வருகிறது. பிரிட்டனைப் பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி என இரண்டு கட்சிகள்தான் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் தமிழர்கலும் போட்டிஇடுகின்றனர். உமா குமரன், கவின் ஹரன், , ஜாஹிர் உசேன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், மயூரன் செந்தில் நாதன், கிரிஷ்ணி, ஆகிய 8 தமிழர்கள் வேட்பாளராகப் களம் இறங்கி இருகின்றனர். பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் அதிகம் பேர் போட்டியிடுவது இது தான் முதல் முறை

 

2024 யுனைடெட் கிங்டம் தேர்தல்கள் முடிவுகளை எப்போது எதிர்பார்க்கலாம்

22:00 பிஎஸ்டிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், 650 தொகுதிகளில் உள்ள வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக எண்ணும் பணி தொடங்கும். முதல் முடிவுகள் பொதுவாக 23.00 மணிக்கு (உள்ளூர் நேரம்) அறிவிக்கப்படும், வெள்ளிக்கிழமை காலை 09:00 (உள்ளூர் நேரம்) 02.00 (உள்ளூர் நேரம்) மற்றும் 04.00 (உள்ளூர் நேரம்) இடையே, 325 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 04.00 (உள்ளூர் நேரம்) மற்றும் 06.00 (உள்ளூர் நேரம்) இடையில் 275 இடங்கலுகான முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதி முடிவுகள் வெள்ளிக் கிழமை காலை வெளியாகும். தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்பதைத் தீர்மானிப்பது, நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையை அமைக்கும் அளவுக்கு எம்.பி.கள் இறுக வேண்டும் .. ஒரு கட்சி பெரும்பான்மையை அடைய 326 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 03.00 BSTக்குப் பிறகு எந்த ஒரு கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது நமக்குத் தெரிய வாய்ப்புள்ளது

 

இங்கிலாந்து தேர்தல் 2024 நேரடி அறிவிப்புகள்

பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.இங்கிலாந்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி சற்று முன் வாக்களித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிக்கு முன்னால் ஜெய்ப்பது பெரும் சவாலாக இருக்கிறது. தற்போதைய கணிப்புகளின் படி தொழிற்கட்சி முன்னிலை வகிக்கிறது, இது அரசாங்கத்தில் ஒரு மாற்றத்திற்கான அறிகுறி 650 தொகுதிகளில் வாக்காளர்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முதல்-பாஸ்ட்-தி-போஸ்ட் தேர்தல் முறையின் கீழ் UK செயல்படுகிறது. குறைந்த பட்சம் 326 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும், அதன் தலைவர் பிரதமராவார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தற்போதுள்ள பிரதமருக்கு கூட்டணி ஆட்சி அமைக்க முதல் வாய்ப்பு கிடைக்கும். தேர்தல் செயல்முறை, வாக்காளர் தகுதி மற்றும் வாழ்க்கைச் செலவு, NHS போராட்டங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் திர்போதைய கட்சிக்கு….க்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்.ஏறக்குறைய ஒன்றரை தசாப்த கால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் இந்த பொதுத் தேர்தல் மற்றும் என்று எதிர்பார்க்க படுகிறது.

 

வாக்குச்சாவடியின் விதிகள்

வாக்குச் சாவடிகள் திறக்க இன்னும் 15 நிமிடங்கள் உள்ள நிலையில், இன்று ஜூலை 4 வியாழன் இரவு 10 மணிக்கு வாக்குச் சாவடிகள் மூடப்படும்

இரவு 10 மணிக்கு வாக்குச் சாவடிக்கு வெளியே நின்றாலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் இரவு 10 மணிக்குப் பிறகு வந்தால் வாக்களிக்க முடியாது.
இங்கிலாந்தில் உள்ளவர்கள் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் வாக்குச் சாவடி அட்டை ஏற்கனவே வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும். வாக்குச் அட்டை கிடைக்கவில்லை என்றால், உங்கள் முகவரியை wheredoivote.co.uk இல் பதிவிடலாம்

வேறு சில விதிகள்:
வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் தவறு செய்தால், பணியாளர் ஒருவரை மாற்றுமாறு கேட்கலாம் (உங்கள் வாக்குச் சீட்டை வாக்குப்பெட்டியில் போடாத வரை )

 

ரிஷி சுனக் யார்க்ஷயர் தொகுதியில் வாக்களித்தார்

ரிஷி சுனக் தனது கிரேடு II-பட்டியலிடப்பட்ட மேனர் ஹவுஸிலிருந்து தனது ரிச்மண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் உள்ள கிர்பி சிக்ஸ்டன் வில்லேஜ் ஹாலில் வாக்களிக்க ஆயத்தமனார்.சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ரேஞ்ச் ரோவரில் கைகோர்த்த படி கிராம மண்டபத்திற்குள் சென்றனர். சுனக் வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தவர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

இங்கிலாந்து பொதுத் தேர்தல் எப்படி, எப்போது நடைபெறும்?

2024 UK பொதுத் தேர்தல் ஜூலை 4, வியாழன் அன்று காலை 7 மணி (06:00 GMT) முதல் இரவு 10 மணி வரை (21:00 GMT) நடைபெறும்.

650 நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில், அதாவது பள்ளிகள் அல்லது சமூக மையங்களில் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

UK, ஃபர்ஸ்ட்-பாஸ்ட்-தி-போஸ்ட் (FPTP) முறையைப் பயன்படுத்துகிறது, (FPTP) என்றால் first past the post என்று அர்த்தம். எந்த ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக (MP) ஆகிறார்,பிஆர் அமைப்பில், ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் விகிதத்தில் நாடாளுமன்ற சீட்..கள் ஒதுக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் (ஒவ்வொரு தொகுதிக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் உள்ளது) அதிக வாக்குகள் பெற்ற எம்.பி.க்கள் ஜூலை 5 ஆம் தேதி அதிகாலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

ஒரு கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால் – தொழிற்கட்சி எதிர்பார்க்கப்படுவது போல் – அதன் தலைவர் பிரதமராவார், மேலும் இரண்டாவதாக அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களைக் கொண்ட கட்சியின் தலைவர் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவராக அமர்வார். கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், சுனக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இந்த தேர்தலை சந்திகிறார்கள்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மிகப்பெரிய கட்சி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முற்படலாம்