in

தமிழக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக மயிலாடுதுறை செயல் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில்
கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நாகை கிளை திட்டசெயலாளர் கலைச்செல்வன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கடந்த 01-12- 2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும், ஆரம்ப நிலை காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் காணும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்கிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடு, அவுட் சோர்சிங் -ஐ புகுத்த கூடாது, கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணிமாற்றம் செய்ய வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும், கணக்கீட்டு பணியாளர்களுக்கு, கணக்கீடு செய்ய வாரியமே கைபேசி அல்லது டேப்லெட் வழங்கிட வேண்டும், தொடர்ந்து கடந்த 01-12-2019 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் 6% ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல், ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

16அடி நீள அலகைக் குத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண் பக்தர்.