in

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் துலா உற்சவ பெருவிழா திருக்கல்யாணம்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் துலா உற்சவ பெருவிழா திருக்கல்யாணம்

 

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் துலா உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில்,108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களான ஸ்ரீரங்கப்பட்டினம் , ஸ்ரீரங்கம், சாரங்கம், அப்பாதுரங்கம் என்ற வரிசையில் ஐந்தாவது பஞ்ச ரங்க க்ஷேத்திரமாக ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அழைக்கப்படுகிறது.

புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் இந்தாண்டு துலா உற்சவ பெருவிழா கடந்த 07 ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் திருநாளான நேற்று ஸ்ரீ பரிமள ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ பரிமள ரங்கநாயகி தாயார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து, ஆலயப் பிராகாரத்தில் மாலை மாற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பின்னர், சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் நடந்தேறியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ம் தேதி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஒரு லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்து சாதனை

இயக்குனர் வி. சேகர் காலமானார்