in

10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் மிகவும் அரியவகை மரபணு குறைபாடால்

10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் மிகவும் அரியவகை மரபணு குறைபாடால்

கழுத்தின் 2 எலும்புகள் விலகி முதுகு தண்டுவடத்தை அழுத்தியதால்
இரு கைகளும், கால்களும் செயலிழந்த 4 வயது ஆண் குழந்தைக்கு
தஞ்சை தனியார் மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் நவீன முறையில் கழுத்து மற்றும் தண்டுவடத்தில் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றி சாதனை புரிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை ஒரு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில் இருந்தன.

அதனை இந்த அறுவைசிகிச்சையின் மூலம் சரிசெய்து தண்டுவட அழுத்தத்தை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பொதுவாக குழந்தைகளுக்கு செய்யப்படும் தண்டுவட அறுவை சிகிச்சையே அதிக சவாலானதாக இருக்கும் நிலையில், இந்தச் சிறுவனுக்கு இருந்த அரிய மரபணு எலும்பு குறைபாடு இந்தச் சிகிச்சையை மேலும் சிக்கலானதாக்கியது.

தற்போது, அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சிறுவனின் செயலிழந்திருந்திருந்த கை, கால்களில் அசைவு ஏற்பட்டு, உடல்நிலை படிப்படியாக சீராகி வருகிறது  அச்சிறுவன் தற்போது பிறரது உதவியுடன் நடக்கத் தொடங்கியிருக்கிறார்..


இந்த சிறுவன் சிறிய விபத்தில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அவனது மேல் கழுத்து எலும்புகள் விலகின. இதனால் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டு, கை மற்றும் கால்களில் உணர்வும் இயக்கமும் அற்ற நிலை ஏற்பட்டது.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், அந்தச் சிறுவனுக்கு எலும்புகளின் வளர்ச்சியையும், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியையும், பாதிக்கும் ‘ஸ்பான்டைலோபிபிசீல் டிஸ்ப்ளாசியா கன்ஜெனிட்டா’ எனும் அரிய பிறவி குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டது.

கழுத்து-தண்டுவடத்தின் மேற்பகுதியில் ஸ்க்ரூ பொருத்துதல் (OCTSF) என அழைக்கப்படும்  இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருண்குமார் மற்றும் டாக்டர் கவீஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.

மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் அரிமாணிக்கம் மற்றும் டாக்டர் வினோதா தேவி ஆதரவுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .இது குறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் அருண்குமார் கூறுகையில் “இச்சிறுவன் மீண்டும் நடக்கத்தொடங்குவதற்கு உதவியிருப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

குழந்தைகளுக்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்வது சவாலானது; அதிலும் இத்தகைய பிறவி மரபணு குறைபாடு உள்ள சிறார்களுக்கு அது இன்னும் கூடுதல் சிக்கலானது.

மயக்க மருந்து நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் அடங்கிய பல்துறை குழுவின் ஒத்துழைப்புடன், நவீன நரம்பியல் இமேஜிங் மற்றும் நரம்பு மண்டல கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியோடு .

இந்த அறுவை சிகிச்சையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் எங்களால் செய்ய முடிந்தது.” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்..

What do you think?

The Ultimate Guide to Georgia Slot Machine Laws

குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை