in

போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக் கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது சிஆர்.சரஸ்வதி பேட்டி

போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக் கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்த்தா வருத்தமாக உள்ளது என  நடிகை சிஆர்.சரஸ்வதி பேட்டி.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகையும் – அமமுக கொள்கை பரபரப்பு செயலாளருமான சிஆர்.சரஸ்வதி, அமுமுக இடம்பெறும் கூட்டணி தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பள்ளிக்கூடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது 14 – 15 வயதுடைய சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போடுகிறார்கள். அதை பார்க்கும் போது பயமாகவும் – வருத்தமாகவும் உள்ளது.

இந்த போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். நான்கு சிறுவர்கள் வட மாநில இளைஞரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதெல்லாம் அம்மா ஆட்சி காலத்தில் நடந்ததில்லை. சட்டம் ஒழுங்கு அவ்வளவு கண்ட்ரோலாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் இந்த போதை கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களும் பெண்கள் சிறுமிகளை பாலில் வன்கொடுமை செய்பவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை கொடுக்கக்கூடாது அதிகபட்சனை தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் பயம் வரும்.

இந்த தவறுகள் படிப்படியாக குறையும். கஞ்சா வெளியிட்ட போதை பொருட்கள் பள்ளி கல்லூரிகள் வாசலில் விற்பது கவலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பிரியாணி – பொது மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு பிரியாணி

திண்டுக்கலில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மடிக்கணினி வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி