போதைப்பொருள் பழக்கம் திரையுலகில் வெகு நாட்களாக இருக்கிறது
நடிகர் இசையமைப்பாளர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட சகலகலா வல்லவன் ஆன விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் வெளியாக உள்ளது.
இவரது தயாரிப்பில் உருவாகி இருக்கும் 12 வது திரைப்படம். இப் படத்தை இயக்குனர் லியோ ஜான்பால் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் பிரீகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ப்ரோமோஷன் நேற்று மதுரையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. அந்த விழாவில் செய்தியாளர்கள் விஜய் ஆண்டனியிடம் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாட்டு அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு சிகரெட் பிடிப்பதும் ஒரு போதைப்பழக்கம் தான் புகைப் பழக்கத்தின் அடுத்த கட்டம்தான் போதை பொருள் பயன்பாடு.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதைப் பற்றி நான் கூற ஒன்றும் இல்லை சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் வெகு நாட்களாக இருக்கிறது.
இந்த கூட்டத்தில் கூட யாரேனும் இருக்கலாம் என்று கூறியவர் சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பிறகு இசையமைக்க திட்டமிட்டுள்ளேன் AI டெக்னாலஜி வந்தாலும் இதயத்தை வருடும் சில பாடல்களை உருவாக்க இசையமைப்பாளர்களால் முடியும் என்று கூறியுள்ளார்.


