in

குடும்ப விவகாரத்தை”அரசியல் ஆக்காதீங்க!” விஜய் விஷயத்தில் குஷ்பூ சீற்றம்!


Watch – YouTube Click

“விஜய் இதையெல்லாம் கடந்து தான் வரணும்”

 

கடந்த சில நாட்களாவே சோசியல் மீடியாவுல ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்குற விஷயம், நம்ம தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரோட மனைவி சங்கீதா விவாகரத்து விவகாரம் தான்.

இப்போ இதுல ஒரு முக்கியமான அப்டேட் கிடைச்சிருக்கு.

சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்துல விவாகரத்து கேட்டு மனு தாக்கல் பண்ணிருக்காங்க. இதனால, வர்ற ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் நேர்ல ஆஜராகணும்னு கோர்ட் உத்தரவு போட்டுருக்கிறதா சொல்லப்படுது.

1999-ல கல்யாணம் ஆகி, ஒரு பையன் (சஞ்சய்), ஒரு பொண்ணு (சாஷா) இருக்கிற நிலையில, இந்த நியூஸ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் பண்ணிருக்கு.

விஜய் இப்போ அரசியல்ல இறங்கி இருக்குறதால, இந்த விவாகரத்து விஷயத்தை பலரும் அரசியல் ஆக்கிட்டு வர்றாங்க. இதப்பத்தி ஏர்போர்ட்ல மீடியாகாரங்க கேட்டப்போ, நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ செம டென்ஷன் ஆகிட்டாங்க!

“கணவன் – மனைவிக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும். அது அவங்களோட தனிப்பட்ட விஷயம் (Personal Life). தயவு செஞ்சு இதை யாரும் அரசியல் ஆக்காதீங்க.

அவங்க வாழ்க்கையை பத்தி பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை!” அப்படின்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பதில் சொல்லிருக்காங்க.

அதே மாதிரி அண்ணாமலையும், “விஜய் இதையெல்லாம் கடந்து தான் வரணும்”னு ஒரு அட்வைஸ் குடுத்திருக்காரு.

தேர்தல் வேற நெருங்குற இந்த நேரத்துல, ஒரு பக்கம் விஜய்க்கு ஆதரவா ரசிகர்கள் போஸ்ட் போட, இன்னொரு பக்கம் எதிர் தரப்பினர் இதை வச்சு வம்பிழுத்துட்டு இருக்காங்க.

எது எப்படியோ, தலைவரோட குடும்ப விஷயம் இப்படி வெளிய வந்தது தான் வருத்தமான விஷயம்!


Watch – YouTube Click Shorts

What do you think?

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பிராய்லர் கோழி வியாபாரி

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழா திருக்கல்யாண வைபவம் கோலாகலம்