in

டான் போஸ்கோ பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு

 டான் போஸ்கோ பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு

 

பெற்றோர்கள் நம்மை நம்பி அனுப்பி வைக்கும் குழந்தைகளை ஆசிரியர்களான நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில். மகேஷ் அறிவுறுத்தினார்.

தஞ்சையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு நடைப்பெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில். மகேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் மாணவர்கள் சார்பிலும், ஆசிரியர்கள் சார்பிலும் கவுன்சிலிங் சப்போர்ட் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் குடும்பம் சார்ந்து அல்லது சுற்றம் சார்ந்து சில நேரங்களில் தவறான முடிவு எடுக்கப்படுகிறது.

பெற்றோர்கள் நம்மை நம்பி அனுப்பி வைக்கும் குழந்தைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தில் விட்டு செல்வது நம் மீது உள்ள நம்பிக்கையில் தான்

அவர்களுக்கு எந்த வகையில், எந்த மாதிரியான அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்பதை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள்.

மாணவர்கள் தற்கொலை சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்றார்.

What do you think?

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஆஷாட நவராத்திரி விழா 8 ஆம் நாள் வெண்ணெய் அலங்காரம்