in

திமுகவா? அதிமுகா? முடிவெடுப்போம் பிரேமலதா விஜயகாந்த்

திமுகவா? அதிமுகா? முடிவெடுப்போம் பிரேமலதா விஜயகாந்த்

 

திமுகவா? அதிமுகா? என நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் : பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது : பிரேமலதா விஜயகாந்த்

போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து அரசு பேச வேண்டும் : பிரேமலதா வலியுறுத்தல்

திமுக கூட்டணியா அல்லது அதிமுக கூட்டணியா என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 2026ஆம் தேர்தல் மக்களுக்கு நன்மை பயக்கும் மாபெரும் வெற்றியாகவும், மாபெரும் ஆட்சியாகவும் அமையும் என கூறினார்.

தேமுதிக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மகத்தான கூட்டணியை அமைக்கும் என்றும், திமுகவும், அதிமுகவும் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை என்பதால் எங்கள் தரப்பில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.

எந்தெந்த தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என்பது தொடர்பாக கூட்டணி அமைந்தவுடன் முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் படுகொலைகள் தினந்தோறும் நடைபெற்று சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என குறை கூறினார்.

மேலும், தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து வாக்குறுதி கொடுத்ததுபோல, போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களை அரசு அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்.

What do you think?

பராசக்தி படத்தைப் பார்த்துட்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்க கோரி பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்