in ,

விரைவில் கடலூரில் தேமுதிக மாநாடு

விரைவில் கடலூரில் தேமுதிக மாநாடு

 

கடலூரில் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9 ஆம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறும் – பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார்.

அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிக திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலை சந்திப்போம். தொண்டர்களின் எதிர்பார்ப்பை அடுத்து இளைஞரணி பதவி விஜயபிரபாகருக்கு வழங்கப்பட்டுள்ளது. நானும், விஜயபிரபாகரும் அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த் சிலை திறக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றார்.

மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டார்.

அத்தொகுதியில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் தோல்வியுற்றார். ஆனால் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது.

4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவருக்கு அத்தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. வரும் 2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய பிரபாகரை தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமித்துள்ளது அக்கட்சிக்கு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

 

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய சித்திரை மாத கிருத்திகை

மீண்டும் நடிப்பில் இறங்கும் மிர்ச்சி செந்தில்