குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீழ்ப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சி. உறுதிமொழி ஏற்பு, வீழ்ப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு துறையால், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் தினத்தை ஒட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.குழந்தைகள் பாதுகாப்பு பற்றி உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மன்னம்பந்தல் பொறியியல் கல்லூரி வரை சென்றது.

பேரணியில், குழந்தைகள் கல்வி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு முழக்கமிட்டனர்.
பேரணியில் 500 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


