பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து சோதனை மாவட்ட ஆட்சியர் தள ஆய்வு
கீழ்பென்னத்தூர் ஊராட்சியில் தள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்…..பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து சோதனை…..

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர், வேளானந்தல், கோணலூர், நாடழகனந்தல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோணலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவரை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனை தெடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பணிகள் மற்றும் நாடழகனந்தல் நாற்றாங்கல் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


