ஆறு மணி நேரம் ராஷ்மிகாவுடன் குப்பை தொட்டியில் இருந்த தனுஷ்
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா, ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள Third Single பிப்பி பிப்பி டம் டம் நேற்று வெளியியானது.
முன்னணி நடிகர்களுடன், பிரபல நடிகர்கள் ஜிம் சர்ப், தலிப் தஹில் மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கீழ் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் தயாரித்துள்ள குபேரா, பார்வையாளர்களை கவரும் நோக்கில் பான் இந்தியா Movie…யாக தயாராகி வருகிறது.
நடிகர்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸி…யாக இருக்க ஹைதராபாத் ப்ரோமோஷன் போது தனுஷ் பேசியது தற்போது சமூகத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் ஏற்றிருக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இயக்குனர் சேகர் கமலா தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் இப்படத்தில் பிச்சை காரனாகவும் நாகர்ஜுனா விசாரனை அதிகாரியாகவும் நடித்திருகின்றனர்.
நடிகர் தனுஷ் சேகர் கமுலா இயக்கத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் மற்றும் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது இந்த படத்தின் சூட்டிங் குப்பை தொட்டியில் கிட்டத்தட்ட ஆறு ஏழு மணி நேரம் சூட் நடந்தது.
என்ன இப்படி நாற்றம் அடிக்கிறதே என்று நான் ராஷ்மிகாவிடம் கூறினேன் ராஷ்மிகாவோ எனக்கு அப்படி எந்த ஸ்மெல்…லும் அடிக்கலை சார் என்று கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார்.