ராஞ்சனா climax மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து … அறிக்கை வெளியிட்ட Dhanush
தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ராஞ்சனா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் Rerelease (ஆகஸ்ட் 1) செய்யப்பட்டது.
AI- மூலம் Climax மாற்றப்பட்டதற்கு இயக்குனர் Anand L.Rai கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து படத்தின் நடிகர் தனுஷும் AI-யைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்களின் முடிவு படத்தின் ஆன்மாவைப் பறித்ததாகக் கூறியுள்ளார்.
மறுபுறம், ராஞ்சனாவின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் இதை “படைப்பு ரீதியான மறுகற்பனை” என்று விவரித்தது.
தனுஷ் ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த மாற்றத்தை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
“AI-யில் மாற்றப்பட்ட க்ளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ திரைப்படத்தை மீண்டும் வெளியிட்டது என்னை மிகவும் பாதித்தது. இது நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்ட படம் அல்ல. திரைப்படங்கலில் மாற்றதை ஏற்படுத்த AI ..யை பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமே ராஞ்சனா.
எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும். இயக்குனரோ ….சில நாட்களுக்கு முன்பு ஒரு சமூக ஊடக அறிவிப்பு மூலம் இதைப் பற்றி நான் அறிந்தேன். அந்த முடிவு ஏன் மாற்றப்படுகிறது என்று மக்கள் ஏற்கனவே எனக்கு செய்தி அனுப்பி வருகின்றனர்.
இதைப் பற்றி என்னால் சிந்திக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை, தயாரிப்பாளர்களால் இதை எப்படிச் செய்ய முடியும்? இது மக்கள் விரும்பிய ஒரு முடிவு! திரைப்படத் தயாரிப்பாளர் இல்லையென்றால், குறைந்தபட்சம் பார்வையாளர்களைக் கேளுங்கள்” என்று ராய் கூறியிருந்தார்.


