in

துலா கட்ட காவிரி ஆற்று படித்துறை மாசடைந்து காணப்படுவதால், பக்தர்கள் அவதி

துலா கட்ட காவிரி ஆற்று படித்துறை மாசடைந்து காணப்படுவதால், பக்தர்கள் அவதி.

 

காசியில் கங்கை கரைக்கு இணையாக போற்றப்படும் மயிலாடுதுறை துலா கட்ட காவிரி ஆற்று படித்துறை, குப்பைகள் சேர்ந்து மாசடைந்து காணப்படுவதால் புனித நீராட வரும் பக்தர்கள் அவதி, தூய்மைப்படுத்த கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வழியே காவிரி ஆறு ஓடுகிறது. காசியில் கங்கை கரைக்கு இணையாக மயிலாடுதுறை காவிரி ஆறு போற்றப்படுகிறது. இங்குள்ள துலா கட்ட படித்துறையில் 16 தீர்த்தக்கிணறுகள் அமைந்துள்ளது.

கங்கை முதலான இந்தியாவின் புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை நீக்கிக் கொள்ள மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடுவதாக காவிரி மகாத்மியம் என்ற நூல் விவரிக்கிறது. காவிரி ஆற்றங்கரையில் மயிலாடுதுறையில் காசியில் இருப்பது போல் ஆறு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

புகழ்பெற்ற இந்த காவிரி படித்துறையில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் புனித நீராட வரும் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமாவாசை தர்ப்பணம் அளிக்கும் நாளில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

மகா சங்கம..திற்கு போட்டியாக…பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்பெஷல் எபிசொட்

பாஜகவில் இணைகிறாரா நடிகை மீனா