in

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழக அரசின் நியாய விலை கடைகளில் ப்ளூடூத் மூலம் விற்பனை செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என் மனம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.

தமிழக அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலை விற்பனை கடைகளில் ப்ளூடூத் மூலம் விற்பனை செய்யும் புதிய முறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த முறையில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், இந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆள் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தியும், பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

What do you think?

மிக பழமையான ஸ்ரீ மகா ஓம் சக்தி ஆலய மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆனி திருவிழாவை முன்னிட்டு தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய காவடி திருவிழா