கூலி Second சிங்கள் நாளை வெளியாகிறது’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகிய பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் , கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ‘மோனிகா’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 11 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தது.
பூஜா ஹெக்டே “லவ் யூ மோனிகா” என்ற பாடல் வரிகளுக்கு கால் அசைக்கும் ஒரு விளம்பரத்துடன் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார், மேலும் அதன் வீடியோவில் சௌபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் பூஜாவுடன் நடனமாடுகிறார்கள்.
X தளத்தில் , பூஜா, “மோனிகா காய்ச்சல் தொடங்கட்டும்” என்று எழுதினார்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ரெபா மோனிகா ஜான் மற்றும் ஆமிர் கானும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.