in

மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி பாண்டி கோவில் அம்மா திடல் பகுதியில் முருக பக்தர் மாநாடு 52 நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டில் மத மோதலை தூண்டும் வகையில் பேசப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி பாண்டி கோவில் அம்மா திடல் பகுதியில் முருக பக்தர் மாநாடு நடைபெற உள்ளது

இந்த மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என 52 நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டின் போது அரசியல் கட்சிகள் குறித்தும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவதை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முருக பக்தர்கள் மாநாட்டு ஏற்பாட்டாளரிடம் உரிய அறிவுறுத்தலை முன்னெச்சரிக்கையாக வழங்க கோரியும் , நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்..

What do you think?

மதுரையில் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க கோரி கண்ணீர்மல்க புகார் மனு.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நெல்லை சு.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.