Coolie பட டைட்டில் மாற்றம்.. அதிருப்தியில் ரசிகர்கள்
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய செய்தி என்னவென்றால், கூலிக்கு இந்தியில் வேறு டைட்டில் வைக்கபட்டிருகிறது, ‘மஜ்தூர்’ என்று வைக்க பட்ட பெயர் தயாரிப்பாளர்களின் மிக மோசமான முடிவு என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் நாளை மாலை முதல் சிங்கிள் வெளியீட்டு..க்கான நேரத்தை அறிவித்தனர். பெயர்மாற்றதிற்கான காரணம் பதிப்புரிமை சிக்கல்கள் …லாக இருக்கலாம், ஏனெனில் ஏற்கனவே கூலி என்ற தலைப்பில் மூன்று இந்தி படங்கள் உள்ளது.
அமிதாப் பச்சனின் பழைய படமும் கூலி (1983) என்று பெயரிடப்பட்டுள்ளது,. மேலும், கோவிந்தாவின் கூலி நம்பர் 1 (1995) மற்றும் வருண் தவானின் கூலி நம்பர் 1 (2020) போன்ற பிற படங்களும் உள்ளன. எனவே, ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு வேறு தலைப்பு வைக்கப்பட்டு இந்தியில் ‘மஜ்தூர்’ (Majdoor) என்று வெளியிடப்படும். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரித்திக் ரோஷன் மற்றும் என்டிஆரின் வார் 2 படத்துடன் மோதுகிறது.
இப் படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் பஷீர், உபேந்திரா மற்றும் காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் ஆமிர் கானும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றார்.