சினிமா செய்திகள்
Dawn பிக்சர்ஸ் தயாரிப்பில் நிறுவனத்தின் தலைவர் ஆன ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்க துறையினர் ஏற்படுத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
எவ்வளவு பணம் இவரிடம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் டாஸ்மாக் தொழிலில் வருமானம் சேர்த்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புயலை கிளப்பி உள்ளார்……
நடிகை ஆதியை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் நிறைவுற்றதை மகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிக்கி கல்ராணிக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து…….
நடிகர் ரவி மோகன் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று ஆர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு நீதிமன்றம் ரவி மோகனுக்கு 12 நாட்களில் பதில் அளிக்க உத்தரவு…….
ஆன்ட்டி ரோலில் நடிப்பதை விட டப்பா ரோலில் நடிப்பது மேல் என்று தன்னை நடிகை ஜோதிகா விமர்சித்ததாக சிம்ரன் கூறியுள்ளார். மன உளைச்சல் கொடுத்த அவரின் பதிவிற்கு தற்பொழுது ஜோதிகா மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்…..
முன்னால் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்….
கேனஸ் 2025 திரைப்பட விழாவில் பாரம்பரிய உடையான புடவையில் வந்து பார்வையாளர்களை அசத்திய ஐஸ்வர்யா ராய்……
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளி போகிறது…
நேற்று 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மோகன் லால் என் ஜி ஓ, விஷ்வ சாந்தி மற்றும் பேபி மெமோரியல் மருத்துவமனையுடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளின் கல்லீரல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக அறிவித்தார்.


