in

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர்
ஆலயத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரிஷபக்கொடி,ஓதுவார்கள் தேவாரம் பதிகம் பாடிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட உற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

What do you think?

மதுரை வரும் tvk தலைவர் விஜய்

ஆன்மீக தலைவர் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி திருக்கடையூர் கோவிலில் சிறப்பு ஜெபம் வழிபாடு