தேவகோட்டையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் வைபவம்
தேவகோட்டையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இவ்விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது தினந்தோறும் பஞ்ச மூர்த்தி களுக்கு சிறப்பு அலங்காரம் திருவிதி புறப்பாடு நடைபெற்றது நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ரெங்கநாத பெருமாள் திருக்கோவிலில் இருந்து பெருமாள் சீர்வரிசையுடன் வருகை புரிந்தார் சிவன் கோவிலில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மாலைமாற்று வைபவம் கனிகாதானம் பூணூல் அணிவித்தல் பட்டு வஸ்திரம் சாத்துதல் திருமண சடங்குகள் நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஆண்கள் பெண்கள் திருமணம் நடைபெற மாலை வாங்கி கொடுத்து வேண்டிக் கொண்டனர்.