in

நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா

நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா

 

நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில் 7ம் திருநாளான தங்க சப்பரத்தில் சுவாமி எழுந்திருளி வீதியுலா நடைபெற்றது.

நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம். திரளான பக்தா்கள் சுவாமி தாிசனம்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு பெருமாளுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறுவது கோவிலின் தனி சிறப்பு ஆகும்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் தங்க தோளுக்கிணியானில் புறப்பாடு கண்டு தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

மாலையில் பெருமாள் ஸ்ரீவரமங்கை தயாருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவும் நடக்கிறது . ஏழாம் திருநாளான இன்று காலையில் வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனம் தீர்த்தம் சடாரி பிரசாதம் வினியோகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீவரமங்கா சமேத தெய்வநாயகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புண்யகோடி விமானம் என்று அழைக்கப்படும் தங்க சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தாா். திருக்கோயில் முன்மண்டபத்தில் நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டதும் வீதி உலா வந்த தங்கச் சபரத்தில் உள்ள பெருமாள் தாயாருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் தேங்காய் பழம் படைத்தும் வழிபட்டனர்.

தங்க சப்பரம் முக்கிய வீதிகளில் உலா வந்த பின்னர் மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

What do you think?

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கருட வாகனம்

நவதிருப்பதி ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா