in

தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தில் மாற்றம்

தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தில் மாற்றம்

 

நாளை முதல் 10,500 தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தில் மாற்றம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும் திருப்பதி மலையில் உள்ள கவுண்டர் மூலமும் 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

திருப்பதி மலையில் உள்ள கவுண்டர்களில் முதல் நாள் காலை டிக்கெட் வாங்கும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில் கோவிலுக்கு சென்று ஏழுமலையான் வழிபடலாம்.

இந்த முறையில் தலா பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் சுமார் மூன்று நாட்களை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனை கவனித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நாளை முதல் காலை 10 மணிக்கு துவங்கி ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை வழங்கி மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் சாமி கும்பிடும் வகையிலான நடைமுறையை அமலுக்கு கொண்டு வர உள்ளது.

அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் தற்போதைய நடைமுறையின் அடிப்படையில் காலை 10 மணிக்கு ஏழுமலையானை வழிபடலாம் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் திருப்பதி மலையில் உள்ள கவுண்டர்களில் காலை 10 மணிக்கு துவங்கி நாள் ஒன்றுக்கு 800 டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் காலை 7 மணிக்கு துவங்கி நாள் ஒன்றுக்கு 200 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும் என்றும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கும் மாலை 4:30 மணிக்கு துவங்கி ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

What do you think?

கட்டுமான பொருட்களின் கடுமையானவிலை ஏற்றத்த்தால் கட்டுப்படுத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தூய்மை பணியாளர்களை கெளரவித்த வாடகை கார் ஓட்டுநர்கள்