in

தமிழக வெற்றி கழக சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாற்காலி, ரத்த அழுத்தமானி, எடை பார்க்கும் கருவி

தமிழக வெற்றி கழக சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாற்காலி, ரத்த அழுத்தமானி, எடை பார்க்கும் கருவி.

 

கொள்ளிடம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாற்காலி, ரத்த அழுத்தமானி, எடை பார்க்கும் கருவி வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் புற நோயாளிகளுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால் இதனை அறிந்த தமிழக வெற்றி கழகம் சார்பில் 10 நாற்காலி மற்றும் ரத்த அழுத்தமானி, எடை பார்க்கும் கருவி உள்ளிட்ட பொருட்களை மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் வழங்கப்பட்டது.

இதில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் விக்கி, ஒன்றிய இணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் விவேக் ராஜ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குடோனை வேளாண் அதிகாரிகள் சீல்