in

வடலூரில் திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்

வடலூரில் திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்

 

வடலூரில் திடீரென்று தீப்பற்றி எரிந்த கார் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்த பாபு இவருக்கு சொந்தமான மாருதி 800 கார் பழுதடைந்த நிலையில் அங்கு உள்ள மெக்கானிக் கடையில் காரை சரி செய்ய விட்டுள்ளார்.

இந்த நிலையில் மெக்கானிக் அந்த காரை எடுத்துக் கொண்டு காருக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுள்ளார்.

அப்பொழுது காரை விருத்தாசலம் கடலூர் சாலையில் வடலூர் சந்தை அருகே காரை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். அப்பொழுது அந்த கார் இன்ஜின் முன்பு புகை வந்து கொண்டிருந்த பொழுது அப்பொழுது ஓடிவந்து பார்த்த பொழுது கார் மல மல வென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

கார் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

மதுரை விமான நிலையத்தில் APL ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி

இராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு கோ பூஜை