in

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு

 

பனங்குடி அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நீ பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் பெரியநாயகி அம்மனை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து என் அருமையான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து இந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்களப் பொருட்களை வைத்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை தொடங்கினர்.

சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் கூற பெண்கள் திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து 108 போற்றி மந்திரங்கள் மகாலட்சுமி மந்திரங்கள் காயத்ரி மந்திரங்கள் கூறி விளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.

நிறைவாக திருவிளக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டனர்.

 

இதில் கலந்துகொண்ட பெண்கள் குடும்ப நன்மைக்காக உலக நன்மை வேண்டியும் புத்திர பாக்கியம் திருமண தடைகள் நீங்க வேண்டியும் அம்மனை வழிபட்டனர் இவ்விழாவில் அன்னதானம் நடைபெற்றது.

What do you think?

மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா