in

3 மணி நேரம் நடு ரோட்டில் நின்ற பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

3 மணி நேரம் நடு ரோட்டில் நின்ற பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

 

நத்தத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து – 3 மணி நேரம் நடு ரோட்டில் நின்ற பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து லிங்கவாடிக்கு 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து புறப்பட்டது. பேருந்தை நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் (42) என்ற தற்காலிக ஓட்டுநர் இயக்கி உள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து அரசுப்பேருந்து வெளியே வந்த போது யூனியன் காம்ப்ளக்ஸ் முன்பாக உள்ள சென்டர் மீடியினில் மோதி பின்பக்க டயர் சேதமடைந்தது.

இதனால் தொடர்ந்து பேருந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் அரசுப்பேருந்து நடு ரோட்டிலேயே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுநர் இன்று தான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நத்தம் பணிமனையில் பணியாற்றும் நிரந்தர ஓட்டுநர்கள் குறிப்பிட்ட சிலரை தவிர மற்றவர்கள் மாற்று பணி வாங்கி கொண்டு அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றுவதால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து இயக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி நத்தம் பகுதிகளில் அரசு பேருந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

What do you think?

சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை பிரம்மேற்ச்சவ திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா