in

Come Back கொடுக்கும் BTS Army…… 

Come Back கொடுக்கும் BTS Army…… 

 

இசை உலகத்துல தென்கொரியாவோட பிடிஎஸ் (BTS) இசைக்குழு செஞ்ச சாதனை சாதாரணமானது இல்ல.

பாட்டு, டான்ஸ், அவங்களோட ஸ்டைல்னு உலகம் முழுக்க இருக்கிற பசங்க முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் இவங்களை ரொம்ப பிடிக்கும்.

இப்போ அவங்க ரசிகர்களுக்கு (BTS Army) ஒரு செம குஷியான செய்தி கிடைச்சிருக்கு!

தென்கொரியா நாட்டுச் சட்டப்படி, அங்க இருக்குற எல்லா இளைஞர்களும் கட்டாயம் ராணுவத்துல சேர்ந்து கொஞ்சக் காலம் வேலை பாக்கணும்.

இதுல எந்த பாரபட்சமும் கிடையாது. அதனால, உச்சக்கட்ட புகழில் இருந்த நம்ம பிடிஎஸ் பசங்களும் தங்களோட மியூசிக் கரியருக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு நாட்டுக்காக ராணுவப் பயிற்சிக்குப் போனாங்க.

ஒவ்வொருத்தரா தங்களோட ராணுவப் பணியை முடிச்சிட்டு இப்போ எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க: ஜின் (Jin), ஜே-ஹோப் (J-Hope), ஆர்எம் (RM), வி (V), ஜிமின் (Jimin), ஜங்கூக் (Jungkook), சுகா (Suga), இவங்க எல்லாரும் அந்த ராணுவக் கடமையை முடிச்சிட்டு இப்போ மறுபடியும் பிடிஎஸ் (BTS) இசைக்குழுவா ஒண்ணா கைகோர்த்திருக்காங்க.

பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்தாச்சு, இனிமே அடுத்தடுத்து புது ஆல்பம், வேர்ல்ட் டூர்னு அதிரடி ஆரம்பமாகப் போகுது. “எங்களோட அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கப் போறோம்”னு அவங்க கொடுத்திருக்கிற இந்த அப்டேட், சோஷியல் மீடியாவை அதிர வச்சிட்டு இருக்கு!

What do you think?

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ கிளைமாக்ஸ் ரிலீஸ்! திடீரென முடங்கிப் போன Netflix !! பல கோடி! செலவில் 5-வது சீசன்

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ இரண்டில் யார் முந்துவது?