அண்ணாவுக்கு நேரமே சரியில்லை! விஜய் ரசிகர்கள் செம அப்செட்..
தளபதி விஜய் இப்போ அரசியல்ல குதிச்சு ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை ஆரம்பிச்சுட்டாரு.
வர்ற ஏப்ரல் மாசம் எலெக்ஷன்ல நிக்கப்போறாரு. ஆனா, இப்போ அவரைப் பத்தி ஒரு ஷாக்கிங் நியூஸ் கோலிவுட் வட்டாரத்துல பயங்கரமா வைரல் ஆகிட்டு இருக்கு!
சென்னையோட மெயின் ஏரியாவான அண்ணா நகர்ல விஜய்க்கு ஒரு பெரிய சொத்து இருந்ததாம். அதை இப்போ திடீர்னு 35 கோடி ரூபாய்க்கு வித்துட்டாராம்! ‘தி வீக்’ (The Week) பத்திரிகையில லக்ஷ்மி சுப்ரமணியன் இதைப்பத்தி விவரமா எழுதியிருக்காங்க.
அதுமட்டுமில்லாம, இன்னும் சில சொத்துக்களையும் விக்க விஜய்க்கு பிளான் இருக்காம். விஜய் ஏன் திடீர்னு சொத்தை விக்கணும்னு ரசிகர்கள் குழப்பத்துல இருக்காங்க.
“எலெக்ஷன் செலவுக்கு காசு வேணுமா?”னு கேட்டா, அது காரணம் இல்லையாம். அவரோட கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கே அவர் 220 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்காரு.
அப்புறம் ஏன் சொத்தை விக்கணும்? உண்மையான காரணம் அவரோட தனிப்பட்ட வாழ்க்கை தான்னு சொல்லப்படுது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கேஸ் போட்டிருக்கிறது தான் இதுக்கு முக்கிய காரணமாம்!
எலெக்ஷன்ல நிக்கும்போது, வேட்பாளர்கள் தங்களோட சொத்து விவரங்களை கரெக்டா தாக்கல் செய்யணும். விஜய் – சங்கீதா ஒண்ணா இருந்தா, அவங்க பேர்ல இருக்குற சொத்துக்களை கணக்கு காட்டலாம்.
ஆனா விவாகரத்து கேஸ் நடக்குறதுனால, சங்கீதா பேர்ல இருக்குற சொத்துக்களை விஜய் தன்னோட கணக்குல காட்ட முடியாத நிலைமை. அதனால தான் அசையா சொத்துக்களை வித்து, பணமா மாத்துறாராம் விஜய்!
ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகுறதுல சிக்கல், இன்னொரு பக்கம் கரூரில் 41 பேர் உயிரிழந்ததுல சி.பி.ஐ. விசாரணைனு விஜய்க்கு வரிசையா தலைவலி வந்துட்டு இருக்கு.
இதுக்கு நடுவுல விவாகரத்து கேஸும் சேர்ந்து, “அண்ணாவுக்கு நேரமே சரியில்லையே.. அவரும் எத்தனையைத் தான் தாங்குவாரு?”னு விஜய் ரசிகர்கள் இப்போ செம அப்செட்ல இருக்காங்க!
விஜய்யோட இந்த அதிரடி மூவ், அரசியல்ல எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்!