in

குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் நேற்று குத்தாலம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார் செயலாளர் அழகர் முன்னிலை வகித்தார் பொருளாளர் கண்ணன் வரவேற்றார்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.

மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு உன்னத உணவான தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் அதன் சிறப்பு குறித்தும் பேசினர்.

அப்போது தலைமை மருத்துவர் அதிகாரி ஜான்சிராணி, மகப்பேறு மருத்துவர் ஷாஹினா பர்வீன், மயக்கவியல் நிபுணர் ஹரிணி, மருத்துவர் சண்முகப்பிரியா உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What do you think?

சிவ ஆலயத்தில் உலக நலன் வேண்டி – ஏகாதச ருத்ரா – ஹோமம்

ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்