“ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்ட இளைஞரின் உடல்
தஞ்சை வெண்ணாற்றில் அடித்து செல்லப்பட்ட 17 வயது இளைஞரின் உடல் “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்திட தாமாக முன்வந்த ட்ரோன் நிறுவனத்தால் 17 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம்:
தஞ்சையை சேர்ந்த முகமது சமீர் 17 வயது துடிப்பான இளைஞர் பெற்றோருக்கு ஒரே பையன் செல்லமாக வளர்ந்த முகமது சமீர் சிறந்த விளையாட்டு வீரர்
+2 தேர்ச்சி பெற்றவுடன் உயர் கல்வி பயில திருச்சி ஜோசப் கல்லூரியில் பொறியியல் படிப்புக்காக சேர்ந்து 3 நாட்களான நிலையில்
நேற்று முன்தினம் தஞ்சை வெண்ணாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரை பார்த்ததும் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றவர் கரை திரும்பவில்லை. இந்நிலையில் உடன் சென்ற நண்பர்கள் கூறியதையடுத்து.
முகமது சமீரை தஞ்சை தீயணைப்பு வீரர்கள் தேடிய நிலையில் முகமது சமீர் கிடைக்கவில்லை முகமது சமீர் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதையடுத்து.
தஞ்சையில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான யாழி ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் கட்டணம் ஏதும் வேண்டாம் நாங்கள் தீயணைப்பு வீரர்களோடு இணைந்து தேடுகிறோம் என்று கூறி இன்று 5 மணி நேரத்திற்கும் மேல்.

தஞ்சை வெண்ணாற்றில் தேடிய நிலையில் முகமது சமீரின் உடலை சுழல் ஒன்றில் கண்டறிந்து ட்ரோன் பைலட் தெரிவித்தவுடன் தீயணைப்பு வீரர்கள் முகமது சமீரின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சையில் முதன் முறையாக பரந்து விரிந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல் ட்ரோன் உதவியால் கண்டரியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


