விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்தி, ரத்ததானம் செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் த வெ க நிர்வாகிகள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரவாயில் தெற்கு பகுதி 154-வது வட்டம் ராமாபுரத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டச் செயலாளர் யுவராஜ் மற்றும் வட்ட துனை செயலாளர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பகுதி செயலாளர் கார்த்திக் அருணாசலம் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் த வெ க நிர்வாகிகள் மட்டும் இன்றி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்கள் மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

