in

குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் 7-வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் 7-வது நாளாக குளிக்க தடை

 

குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் 7-வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு – அருவிகளில் தண்ணீர் குறைந்த உடன் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் இன்று 7-வது நாளாக குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளில் பாதுகாப்பு கருதி இன்று 7-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த உடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ திருவிழா

நான் லைக் போடவில்லை..Tamana