இராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்
திண்டிவனம், இராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் 65-ம் ஆண்டு கூழ்வார்ப்பு திருவிழா.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இராஜாங்குளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய 65 ஆம் ஆண்டு கூழுவாத்தல் திருவிழா மற்றும் ஆடிப்பூர வளையல் அலங்காரத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் 1008 வளையல்கள்யூடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு ரம்யமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன்க்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு ஐந்து தலை நாக அலங்கார வண்டியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்ட இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


