in

பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார் அறுவடை பணிகள் திருவையாறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது

பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார் அறுவடை பணிகள் திருவையாறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு வாழைத்தாருக்கு 200 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வடுகக்குடி, வளப்பக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, நடுக்கடை, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு சாகுபடி செய்யப்படும் பூவன் வழைத்தார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.இதே போல் தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை இலைகளும் அறுவடை செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தற்போது வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கடந்த ஆண்டை விட வாழைத்தார் அதிக விளைச்சல் அடைந்துள்ளது என்றும் தார் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றவர், இன்னும் 4 நாட்களுக்கு மழை இல்லாமல் இருந்தால் வாழை விவசாயிகள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்றார்.

What do you think?

ஜெசி இளைஞர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு வார்த்தையொட்டி கொட்டும் மழையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது