ஒரே பாகமாக வெளிவரும் பாகுபலி
2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவை உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் 2017 ஆம் ஆண்டு பாகுபலின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார்.
1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த பாகுபலி திரைப்படம் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது.
இரண்டு பாகங்களையும் ஒரே படமாக Re-release செய்ய இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் பாகுபலி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.