பாகுபலி Rerelease விரைவில்
இந்திய சினிமா வரலாற்றில் காவியமாக பாகுபலி தொடர்ந்து திகழ்கிறது.
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள இந்தப் பிரம்மாண்டமான படைப்பு பாக்ஸ் ஆபிஸில் முதன்முதலில் சாதனை படைத்த படம் இப்போது மீண்டும் வெளியிடப்பட உள்ளது என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாகுபலி மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது… இந்த அக்டோபரில், இன்னும் பெரிய அளவில் கொண்டாடுவோம்! #BaahubaliReturns. ஜெய் மஹிஷ்மதி….” என்று x தளத்தில் பதிவிட்டனர்..
பாகுபலி: தி பிகினிங் 2015 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் 2017 இல் பாகுபலி 2: தி கன்க்ளூஷன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் பாகத்தின் 8வது ஆண்டு நிறைவைஒட்டி பாகுபலி Rerelease ஆகிறது. சரியான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த அறிவிப்பு மட்டுமே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.