தாமிரபரணி நதி மாசடைவதை தடுக்க விழிப்புணர்வு
தாமிரபரணி நதி மாசடைவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை ஓவியப்பள்ளி மாணவ மாணவிகள் லைவ் ஸ்கெட்ச் வரைந்து அசத்தல். 10 க்கும் மேற்ப்பட்டோர் தாமிரபரணி கரையில் காணும் காட்சிகளை நேரில் வரைந்தனர்.
தமிழகத்தில் வற்றாத ஜீவநீதிகளில் ஒன்றானது தாமிரபரணி நதி. இந்த நதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மாசு அடைந்து வரும் நிலையில் மீண்டும் தாமிரபரணி பொழிவு பெற பல்வேறு நடவடிக்கைகள் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளபட்டு வருகிறது.
தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை சிவராம் கலைக்கூடம் ஓவியபள்ளி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து லைவ் ஸ்கெட்ச் ஓவியம் வரையும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்றைய தினம் மேற்கொண்டனர்.
தாமிரபரணி நதியின் அழகை காணும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தாமிரபரணி நதியை பார்த்து நேரடியாக பார்க்கும் காட்சிகளை தத்ரூப ஓவியமாக வரைந்து அசத்தினர்.
அழகு மிகுந்த தாமிரபரணி நதியை ஓவியமாக வரையும் போது கண்ணில் காணப்படும் மாசு மற்றும் குப்பை கழிவுகள் இனிமேலும் கொட்டப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஓவியம் வரைந்து இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.