in

தஞ்சையில் ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி ஹெல்மேட் குறித்து விழிப்புணர்வு

தஞ்சையில் ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி ஹெல்மேட் குறித்து விழிப்புணர்வு

 

தஞ்சையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 20 பெண்களுக்கு ரஜினி நடித்து திரையில் வர இருக்கும் கூலி படத்தை குடும்பத்துடன் காண ஒவ்வொருவருக்கும் தலா 4 டிக்கெட்டுகளை ரஜினி சாயலில் உள்ள துணை நடிகர் பரிசாக வழங்கினார்.

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களை நிறுத்திய ரஜினி சாயலில் உள்ள துணை நடிகர் இனி சோமு.

பெண்கள் மத்தியில் ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி ஹெல்மேட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாளை திரையில் வர இருக்கும் ரஜினி நடித்த கூலி படத்தை காண உங்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு டிக்கெட்டுகள் என கூறி பரிசாக வழங்கி அசத்தியதோடு ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில்லாமல் வழங்கப்படும் என கூறி பெண்களை ஆச்சரியப்படுத்தினார்.

What do you think?

ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரை வாழ்க்கை நிறைவு…இக்கு வாழ்த்து

போக்குவரத்து மற்றும் வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் 01.11.2025 முதல் டெல்லிக்குள் நுழைய கட்டாயமான தடை