துரித உணவை தவிருங்கள். அம்மா உணவை தவிர்க்காதீர்கள்.. சமையல் கலை நிபுணர் தாமு
துரித உணவை தவிருங்கள். அம்மா உணவை தவிர்க்காதீர்கள்.. சமையல் கலை நிபுணர் தாமு அறிவுறுத்தல்..
புதுச்சேரியில் விநாயக மிஷன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட பயணிகள் பங்கேற்று இலவசமாக பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
மேலும் அங்கு சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு… எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு கூடாது என கண்காட்சி வைக்கப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் தாமு, மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் டாக்டர் தேவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று
“சர்க்கரையில் அக்கறை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது பேசிய சமையல் கலை நிபுணர் தாமு, சர்க்கரை நோய் தடுக்க நமது பாரம்பரிய சமையல் உதவும். இதனை 5000 பேரை வைத்து பரிசோதித்ததாகவும் நமது உணவில் சம அளவிற்கு மருந்து உள்ளது.
ஜங்க் ஃபுட் எனக்கூறப்படும் துரித உணவில் ஏராளமான ரசாயனங்கள் உள்ளன. இதனை சாப்பிடுவதனால் கடந்த 10 ஆண்டுகளாக கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நமது குழந்தைகளுக்கு ஜங் ஃபுட்டை தவிருங்கள் பாரம்பரியமிக்க உணவை கொடுங்கள். அம்மாவின் உணவை தவிர்க்காதீர்கள். அம்மா உணவில் தான் பாசம் அன்பு மருந்து இருக்கிறது என கூறினார்.
மிளகு மற்றும் பூண்டை தினமும் எடுத்துக் கொண்டால் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தாமு கூறினார் ..


