in

உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்மய பயிர் கணக்கெடுப்பு பணிக்கு கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் பேரிடர் காலங்களில் பயிர் ஒத்திசைவு பணிகளை வேளாண்மை துறையினரிடமே ஒப்படைக்க வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் திருச்சி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் தலைமை தாங்கிய மாநிலத் தலைவர் அருள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் 17,167 கிராமப் பகுதிகளுக்கு 39, 618 பேர் வருவாய்த் துறையில் பணியாற்றி வருகின்றனர் ஆனால் வேளாண்மை துறையில் 4,287 பேர்களே பணிபுரிந்து வருகின்றனர் .

பேரிடர் காலத்தில் வருவாய் துறையை சேர்ந்தவர்கள் பயிர் இழப்பீட்டில் பணி புரிவது இல்லை இதனால் பேரிடர் காலங்களில் விவசாயிகளின் பயிர் இழப்பீடு அளவிடுவதில் காலதாமதங்கள் ஏற்படுகின்றது.

எனவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளராக 16,503 பேர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு உதவியாளராக 12,702 உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஒரு உதவியாளர்களை மட்டும் அரசு பணி நியமித்து விட்டு மீதம் உள்ள 12 ,702 உதவியாளர்களை வேளாண்துறையினருடன் இணைந்து செயல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். அதேபோல் பேரிடர் காலங்களில் பட்டா, சிட்டா, அடங்கள் போன்ற அளவிடும் பணிகளை வேளாண் துறையினரிடமே அரசு வழங்கிட வேண்டும்.

அதேபோல் மத்திய அரசு தற்பொழுது கொண்டுவந்துள்ள எண்மய பயிர் கணக்கெடுப்பிற்கு மத்திய அரசு போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தராமல் அந்தப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதனால் வேளாண்மை துறையினருக்கு மேலும் பணி சுமைகள் ஏற்பட்டு வருவதால் கிராமப்புறங்களில் பேரிடர் காலங்களில் வேளாண்மை துறையினர் பணியாற்றும் பொழுது போதுமான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி மாநிலத் தலைவர் அருள் பேட்டி அளித்தார்.

What do you think?

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வருடாபிஷேக விழா