சிவகங்கை ஸ்ரீ அடைக்கல விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா
சிவகங்கை ஸ்ரீ அடைக்கல விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான அருள்மிகு ஸ்ரீ அடைக்கல விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் நடைபெற்றது.
இந்நகரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட மிகப் பழமையான அடைக்கல விநாயகர் திருக்கோவிலை புணரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றது அடுத்து வருகிற 28ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.
விழாவின் முதல் நிகழ்வாக முகூர்த்த கால் நடும் வைபவம் நடைபெற்றது கோவில் முன்பு முகூர்த்த காலுக்கு சந்தனம் குங்குமம் பூமாலைகள் வைத்து கணபதி பூஜை செய்து தீப ஆராதனை காட்டி வழிபாடு.

இதனை தொடர்ந்து பக்தர்கள் முகூர்த்த காலை நடும் வைபவத்தை நடத்தினர் இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டை ஶ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ சசிவர்ணேஸ்வரர் திருக்கோவில் அன்னதான குழு அர்த்த ஜாம குழு மகளிர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


