in

இரட்டணை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

இரட்டணை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

 

இரட்டணை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ரெட்டணை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய நூதன ஜூர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையில் இன்று பல்வேறு வகையான திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் செலுத்தப்பட்டன.

தொடர்ந்து பூர்ணாஹதி செலுத்தி கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணி அளவில் ரெட்டணை பருவத ராஜகுல வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி அங்காளபரமேஸ்வரி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் காலை 9 மணி அளவில் யாத்ரா தானம் கடம் புறப்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கருவறை விமானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கருவறை கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தங்க கவசத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் ரெட்டணை கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பருவதகுல சிவன் படவர் மரபினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் இன்று மாலை கொடியேற்றம்

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக காவிரி ஆற்றின் நீரில் கரைப்பு