in

சிம்பு-வெற்றிமாறன் ஃபேன்ஸ் ரெடியா? ‘அரசன்’ ஷூட்டிங் தேதி லாக்!

வட சென்னை-ல சிம்பு இருந்தா எப்படி இருக்கும்? – ‘அரசன்’ ட்விஸ்ட்!

வட சென்னை-ல சிம்பு இருந்தா எப்படி இருக்கும்? – ‘அரசன்’ ட்விஸ்ட்!
நீண்ட நாட்களா பேச்சில இருந்த செம காம்போ! நம்ம சிம்புவும், மாஸ்டர் வெற்றிமாறன் சாரும் சேர்ந்து பண்ற படம் எப்போ வரும்னு கேட்டுட்டே இருந்தோம்ல? இப்போ அதுக்கான ஃபைனல் அப்டேட் வந்துடுச்சு! படத்தோட பேரு ‘அரசன்’!

இந்த ‘அரசன்’ படத்தோட ஷூட்டிங், நவம்பர் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப் போகுது! டீம் செம ஃபாஸ்ட்டா இருக்காங்க போல! மூணே மாசத்துல படத்தை முடிச்சிடணும்னு பிளான் பண்ணியிருக்காங்களாம். அடுத்த வருஷம் (2026) கோடை விடுமுறையில படத்தை ரிலீஸ் பண்ணணும்னு டார்கெட் வச்சிருக்காங்க. சம்மர் ட்ரீட் ரெடி!

இதுல ஒரு ஹைலைட் என்னன்னா, இந்தப் படம் வெற்றிமாறன் சாரோட ‘வட சென்னை’ படத்தோட அதே டைம்லைன்ல, ஆனா வேற ஒரு புதுக் கதையா இருக்குமாம்! அப்போ கண்டிப்பா அந்த ரியாலிட்டி, வெறித்தனமான ஸ்க்ரிப்ட், அழுத்தமான கதை எல்லாமே இருக்கும்னு எதிர்பார்க்கலாம்! வெற்றிமாறன் படம்னா சும்மாவா! வேற லெவல்ல இருக்கும்!

சிம்புவும், வெற்றிமாறனும் சேரும்போதே தியேட்டர்ல விசில் சத்தம் கேக்குதுல? செம எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கு!

What do you think?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

பழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு கும்பாபிஷேக விழா