in

தஞ்சாவூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடை பயணம், சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தஞ்சாவூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடை பயணம், சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருளால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து தஞ்சாவூரில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் தனியார் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் மது குடிக்காதே, மது பழக்கத்திலிருந்து விலகி விடு, போதைப்பொருள் பயன்படுத்தாதே உள்ளிட்ட பதாகைகளை கொண்டு வந்து அதை கோஷமிட்டு தஞ்சை ரயிலடி பகுதி வரை பேரணியாக வந்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

What do you think?

Рулетка онлайн на деньги рубли: как играть и выигрывать в Казахстане

மாசி மக தேர் திருவிழா – 5-ம் நாள் சோமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், லட்சுமி நாரயணபெருமாள்  திருவீதி உலா