போரூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போரூர் மின்வாரிய உதவி பொறியாளரிடம் இருந்து ரூபாய் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணை
போரூர் மின்வாரிய உதவி பொறியாளர் தாமரை செல்வி என்பவரிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போரூரில் உள்ள மின்வாரிய பகிர்மான அலுவலகத்தில் பணி புரியும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகப்படியான லஞ்சப் பணம் பெறுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் திடீரென போரூர் மின்வாரிய பயிர்மான அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது போரூர் மின்வாரிய உதவி பொறியாளர் தாமரை செல்வி என்பவரின் காரில் இருந்த கைப்பையில் ரொக்கப்பணம் ஒரு லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி ஃபோர் மேன் ராஜ் மற்றும் மோகனரன் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் தொடர்பாக உதவி பொறியாளர் மற்றும் ஃபோர் மேன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணையை முடுக்கியுள்ளனர்.


