அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கிலோமீட்டர் கிரிவலம்
கிரிவலத்தின் மகிமையை உணர்ந்து வகையில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கிலோமீட்டர் கிரிவலம்……
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பத்தாம் நாளான கடந்த 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை பார்த்துவிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கிரிவலத்தின் மகிமையை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.


